ஸ்கூல்லயே ஜாதி இருக்கே! பழங்குடி குழந்தைகளின் ஆதங்கம் இதுதான்!
தமிழ்சினிமாவில் தற்போது பெரியளவில் பாராட்டுக்களையும் நல்ல விமர்சனங்களோடு ஆதரவைதெரிவித்து வரும் படம் என்றால் சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம். இருளர் இனத்தினை பற்றிய கஷ்டங்களையும் எதிர்ப்பார்ப்புகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இந்தியளவில் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தில் நடித்த ராஜாக்கண்ணுவாக நடிகரும் உதவி இயக்குநருமான மணிகண்டன் நடித்திருந்தார். சிறப்பாக நடித்து மக்களிடம் பாராட்டினை பெற்று வரும் மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அந்த மக்கள் தன்னிடம் கூறிய அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் ஏழுமலை சிறுவனிடம் படிக்க போங்க படிச்சா முன்னேறுவப்பா என்று கூறினேன். ஒருநாள் வேட்டைக்கு செல்லும் போது அவன் என்னிடம் சொன்னான், ஸ்கூல்க்கு போ ஸ்கூல்க்கு போ என்று சொல்றியே, என் பக்கத்தில எவனும் வரமாட்டான், நான் வந்தாலே எலி கறி சாப்பிடுறவண்டா என்று கிண்டல் பண்ணுவானுங்க அண்ணா என்று சொன்னான்.
ஆனால் பள்ளியில் கூட ஆசிரியர்கள் நடந்து கொள்வது சரியில்லை அங்கேயும் சாதி இருக்கு என்று கூறியுள்ளார். அங்களுடைய வாழ்நாள் 45 கூட இல்ல. அவங்களுக்கு பொது சமுகம் மேல் கடும் கோபம் இருக்கு என்று கூறியுள்ளார் நடிகர் மணிகண்டன்.
"படிச்சா முன்னேறிடலாம்ன்னு சொல்றோம்... ஸ்கூல்லயே ஜாதி இருக்கே" ????????❤️❤️ pic.twitter.com/lbWHpUvED0
— Second Show (@SecondShowTamil) November 8, 2021