ஜெய் பீம் மாங்கா பிரச்சன பத்தாதுன்னு இவன் அக்ரஹாரத்தை கூட்டுரானே! அமேசான் டிவிட்..
தமிழ்சினிமாவில் தற்போது பெரிய தாக்கத்தை குறித்த சமுகத்தினரிடையே எதிர்ப்பை பெற்று வருவது நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் படம். இப்படத்தில் காலெண்டரில் வன்னியர் சமுகத்தை சார்ந்த அடையாளத்தை பயன்படுத்தியுள்ளதால் வன்னிய சங்கத்தினர் புகாரளித்தனர்.
இதற்கு சூர்யா மற்றும் இயக்குநர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று 5 கோடி இழப்பீடு தொகை கொடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.
இந்த பிரச்சனை பெரியளவில் வெடிக்க அமேசான் ப்ரைம் வீடியோவின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சையான டிவிட் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். எம் எஸ் பாஸ்கர் பிராமணராக நடித்திருப்பார்.
அந்த காட்சியை புகைப்படமாக வெளியிட்டு திஸ் சீன் என்று சிரித்தபடி இருக்கும் ஸ்மைலியை வெளியிட்டுள்ளனர். இதற்கு நெட்டிசன்கள் இந்த பிரச்சனை பத்தாதுனு இவன் வேற ஆரம்பிக்கிறானே என்று கலாய்த்து மெசேஜ் செய்து வருகிறார்கள். இதனால் உடனே அமேசான் டிவிட்டர் பக்கத்தில் அந்த டிவிட்டை டெலீட் செய்துள்ளது.

