நானே என் குடும்பத்தோடு அந்த சீன் பாத்திருக்கேன்!! வெளுத்து வாங்கிய நடிகர் ஜெய்..
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து நல்ல ஒரு இடத்தினை பிடித்துள்ளவர் நடிகர் ஜெய். விஜய்க்கு தம்பியாக நடிக்க ஆரம்பித்து கதாநாயனாக பல வெற்றிகளை கொடுத்துள்ள நடிகர் ஜெய், இடையில் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.
அஞ்சலியுடன் காதல், மது அருந்திவிட்டு ஷூட்டிங்கிற்கு வருவது என்று பல விதமான ரூமர்களால் ஒதுக்கப்பட்டு வந்தார். தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் லேபல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் சில நாட்களுக்கு முன் நடந்தது.
அதில் லேபல் தொடரில் பல கெட்டவார்த்தைகள் இருக்கிறது, நீங்களும் பேசி இருக்கிறீர்கள், இதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் பேசினே, மற்றவர்களும் பேசினார்கள் என்பது படத்தை பார்த்தபோது தான் தெரிந்தது.
அப்படியென்றால் ஒரு படத்தில் ரேப் சீன், கத்தி குத்து சீன் கூட தான் வைக்க முடியாது. நானே என் குடும்பத்தோடு 4, 5 ரேப் சீன் பார்த்திருக்கிறேன் என்று சிரித்தபடி கூறியிருக்கிறார் நடிகர் ஜெய்.