ஹிட் கொடுத்த நெல்சனுக்கு 4 கோடி கார்!! கதையில் நடிச்ச ஸ்டாருக்கு 100 கோடி செட்டில்மெண்ட்..
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வருபவர்கள் ரஜினி, விஜய், அஜித், கமல். முன்னணி நடிகர்களாக இருக்கும் இவர்களின் ரசிகர்கள் தன் தலைவன் தான் டாப் என்று புகழ்ந்து இணையத்தில் போட்டிப்போட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் ஜெயிலர் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 600 கோடியை நெருங்கியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சுமார் 100 கோடி ஷேர் தொகையை கொடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து புது பிஎம்டபிள்யூ காரை பரிசாகவும் கொடுத்திருக்கிறார். தற்போது படத்தின் முழு கதையின் முழு கர்த்தாவாக செயல்பட்ட இயக்குனர் செல்சனுக்கு 4 கோடி மதிப்புள்ள Porsche car மட்டுமே பரிசாக அளித்திருக்கிறார்.
அவரின் சம்பளம் கிட்டத்தட்ட 10ல் இருந்து 15 கோடி வரை இருக்கும். ரஜினியின் 2.0 ஹிட்டுக்கு பின் கடந்த பல படங்கள் டாப் ஹிட் கதையும் வசூலும் சூப்பர் ஃப்ளாப் ஆக அமைந்திருக்கிறது. இதனை வைத்த நெட்டிசன்கள் நெல்சா உனக்கா இப்படி என்று கலாய்த்து வருகிறார்கள்.