10 பெண்களுடன் உடலுறவு!..நடிகையை பிடித்தால் படுக்கைக்கு அழைப்பேன்..ஜெயிலர் பட வில்லனின் சர்ச்சை பேச்சு

Rajinikanth Nelson Dilipkumar Jailer Shiva Rajkumar vinayakan
By Dhiviyarajan Aug 13, 2023 08:33 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ஜெயிலர் படம் வெளியாகுவதற்கு முன்பு வரை தமன்னாவின் காவாலா பாடல் ஹாட் டாபிக்காக இருந்த நிலையில், படத்தின் ரீலிஸ்க்கு பின் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ள விநாயகன் நடிப்பை பற்றி தான் பேசி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விநாயகனிடம் மீடூ சர்ச்சையில் அவரது பெயர் அடிபட்டது குறித்து கேள்வி கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த விநாயகன், நான் இதுவரை 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன். ஆனால் இது வரை யாரையும் கட்டாயம் படுத்தவில்லை.

எனக்கு ஒரு நடிகையை பிடித்தால் படுக்கைக்கு அழைப்பேன் என்று கூறினார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய குறிப்பிடத்தக்கது.