விஜய், அஜித்தை மிரள வைத்த ஜெய்லர் முன்பதிவு, அதற்குள் இப்படியா
By Tony
தமிழ் சினிமாவில் எப்போதும் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் ரஜினி. ஆனால், சில வருடங்களாக இவரின் படம் பெரிய வசூலை தருவதில்லை என்று சிலர் பிரச்சாரம் செய்து வந்தனர்.
அதிலும் குறிப்பாக விஜய் நம்பர் 1, அஜித் நம்பர் 2, ரஜினி நம்பர் 3 என கூறி வந்தனர். ஆனால், ஜெய்லர் படம் இன்னும் ரிலிஸாக 9 நாட்கள் உள்ளது, அதற்குள் வெளிநாடுகளில் இப்படம் வசூல் வேட்டையை தொடங்கி விட்டதாம்.
ஆம், ஜெய்லர் படம் வெளிநாடுகளில் முன்பதிவிலே ரூ 1.1 கோடி வரை வசூல் செய்து ரஜினி மீண்டும் நம்பர் 1 என நிரூபித்து விட்டார்.