ஜெயிலர் போஸ்டரில் இப்படியொரு அலட்சியம்? என்ன நெல்சா இதெல்லாம்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.
பீஸ்ட் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார் இயக்குனர் நெல்சன். பல விமர்சனங்களுக்கு பிறகு இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் இப்படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏமாற்றத்தில் ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் படம் என்றாலே பிரம்மாண்ட முறையில் தகவல்களை வெளியிடுவது வழக்கம். அப்படி சாதாரணமாக படத்தில் டைட்டில் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்தது.
அலட்சியம் காட்டும் நெல்சன்
இந்நிலையில் படத்தின் டைட்டிலில் இருக்கும் பின்னணி புகைப்படத்தை பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் ஏற்கனவே இருக்கும் ஒரு புகைப்படத்தை தான் நெல்சன் டைட்டிலுக்கு பின் வைத்து எடிட் செய்துள்ளார்.

எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இப்படியொரு வேலையை பார்த்துள்ள நெல்சனை ஏன் இப்படி தலைவர் படத்தில் அலட்சியமாக இருக்கிறார் என்று விமர்சித்தும் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.


