ரூ. 800 கோடியை நெருங்கும் ஜெயிலர் 2!! சூப்பர் ஸ்டாரின் ஹிட் லிஸ்ட்..
சூப்பர் ஸ்டாரின் ஹிட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் ரிலீஸாகிய ஜெயிலர் 2 படம் 13 நாட்களில் உலகளவில் ரூ. 744 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்த வார இறுதியில் 800 கோடி ரூபாயை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்த ஹிட் படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
படையப்பா - சந்திரமுகி
1999ல் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் உலகளவில் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததோடு, 2025ல் ரீ-ரிலீஸ் செய்து ரூ. 18 கோடியை வசூலித்தது.
இயக்குநர் பி வாசு இயக்கத்தில் 2005ல் வெளிவந்த சந்திரமுகி படம் உலகளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சுமார் ரூ. 85 கோடிக்கும் அதிகமாக உலகளவில் வசூலித்தது.

சிவாஜி தி பாஸ் - எந்திரன்
சிவாஜி தி பாஸ் திரைப்படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அப்படம் உலகளவில் ரு. 150 கோடிக்கும் அதிகமாக வசூலை கொடுத்தது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படம் சுமார் ரூ. 290 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

கபாலி - எந்திரன் 2.O
இயக்குநர் பா ரஞ்சித், ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான கபாலி படம் சுமார் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புது சாதனையை படைத்தது.
எந்திரன் படத்தை தொடர்ந்து எந்திரன் 2.O படம் ரிலீஸாகி உலகளவில் சுமார் 650 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து டாப் இடத்தை ரஜினிக்கு தந்தது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் ரிலீஸாகி சுமார் ரூ. 600 கோடியை பெற்றுத் தந்தது.
தற்போது ஜெயிலர் 2 படம் ரீலீஸாகி ரூ. 744 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வருகிறது.
