சீதாவுடன் விவாகரத்து..மகளை பார்த்தா பயம்!! மாமியாருக்காக நின்றேன்!! பார்த்திபன் ஓபன்...
பார்த்திபன் - சீதா
பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான் ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமாகியார் தான் நடிகை சீதா. இதனையடுத்து முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்தபோது உதவி இயக்குநராக பணியாற்றிய பார்த்திபனை 1990ல் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சீதா.
11 வருட இடைவெளியில் கடந்த 2001ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். சீதா உடனான மணமுறிவுக்கு என்ன காரணம் என்று மனம் திறந்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

மகளை பார்த்தா பயம்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், என் மகள் கீர்த்தனாவை பார்த்தால் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கும். நான் என் மண முறிவு பற்றி பேசுயது கிடையாது. பேசினாள் அவங்க என்ன சொல்வார்கள் என்று தெரியாது. மற்றொறு மகள் அபி, எனக்கு மிகவும் குளோஸ். அதனால் எனக்கு எப்போது சப்போர்ட்-ஆக இருப்பார். என் மகனும் என்னிடமிருந்து விலகியே இருப்பார். நாங்கள் யாருமே எப்போதும் இந்த மணமுறிவு பற்றி பேச ஒரு வாய்ப்பு அமைந்ததே இல்லை.

3 பேருக்கும் அம்மாவும் பிடிக்கும் அப்பாவும் பிடிக்கும். பொதுவாக இந்த மணமுறிவுக்குப்பின் அம்மாவோ, அப்பாவோ மாறிமாறி கெட்டவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள், அதை நானும் என் மனைவி சீதாவும் செய்யவில்லை. அதனால் குழந்தைகள் நினைத்தால் அம்மாவிடமும் சொல்லலாம், அப்பாவிடமும் சொல்லலாம் என்ற சூழல் இருக்கிறது.
மனைவி அம்மா இறந்துவிட்டார்கள்
இப்போது கூட சமீபத்தில் என் மனைவி அம்மா இறந்துவிட்டார்கள், அதற்காக சென்றேன், காலையில் போன நான் இரவு வரை அங்கு தான் இருந்தேன். எல்லா ஏற்பாடுகளும் நான் தான் செய்தேன். அப்போது என் மனைவி எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.

இறுதி சடங்கிற்கான எல்லா விஷயத்தையும் நீங்கள் தான் கவனித்தீர்கள். அதை நான் பார்த்தேன், ரொம்ப நன்றி என்று அனுப்பியிருந்தார். எங்கள் இருவருக்கும் இடையில் மன வருத்தம் இருக்கிறதே தவிர அதன்பின் இருக்கும் மரியாதை, அன்பு எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. மனைவி என்ற அந்தஸ்த்தை சீதாவை தவிர யாருக்கும் நான் கொடுக்கவில்லை என்று பேசியிருக்கிறார் பார்த்திபன்.