குடியால் இழந்த வாழ்க்கை..தூக்கிவிட்ட பாரதிராஜா!! சொந்த வீடுகளை வாடகைவிட்ட நடிகர் ஜனகராஜ்..
ஜனகராஜ்
தமிழ் சினிமாவில் 70, 80, 90களில் காமெடியனாக கொடிக்கட்டி பறந்த நடிகர் ஜனகராஜ். 1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் இயக்குநர் பாரதிராஜா அவரை அறிமுகப்படுத்தினார்.
எதார்த்தமான காமெடியில் தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை வைத்துக் கொண்டு 200 படங்களுக்கு மேல் நடித்திருந்த ஜனகராஜ் சில கெட்ட பழக்கங்களால் அதாவது படப்பிடிப்பிற்கு குடித்துவிட்டு வரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனாலேயே பட வாய்ப்புகள் குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் 2008ல் விலகினார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஜனகராஜ், 96 படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
லட்சாதிபதியாக இருந்த ஜனகராஜ் தன்னை தூக்கிவிட்ட பாரதிராஜாவின் வீட்டு பக்கத்தில் தான் இருந்துள்ளார். அப்போது அவருக்கு சொந்தமான சில வீடுகளை வாடகைக்கு விட்டிள்ளார் ஜனகராஜ். அதில் சில சினிமாக்காரர்களும் குடியிருந்துள்ளனர்.
தூக்கிவிட்ட பாரதிராஜா
வீட்டு பக்கத்தில் இருந்த பாரதிராஜாவிடம் பழக்கம் ஏற்பட்டு சினிமாவுக்கு முயற்சி செய்துள்ளார். அவர்களுடன் நாடகம் போட துவங்கிய ஜனகராஜ், பாலைவன சோலை அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்திருக்கிறது.
அதன்பின் அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளியூர் சென்ற போது, யாரோ சிலர் வானத்தை நோக்கி கல்லைவிட்டு அடுத்துள்ளனர். அப்போது ஜனகராஜ் முகத்தை பதம் பார்த்த கல்லால் அவர் முகத்தோற்றமே மாறியது.
அறுவை சிகிச்சை மூலம் பூதாகரமாக இருந்து அவரின் முகத்தை மாற்றியப்பின் பாரதிராஜா அவரை பார்க்க வந்துள்ளார். பார்க்க வந்தவர், என் அடுத்த படத்தில் நீதான் ஹீரோ, ராதாவுக்கு நீதான் ஜோடி என்று கூறினார். அப்படி வந்த படம் தான் காதல் ஓவியம். ஜனகராஜின் வாழ்க்கையை மாற்றியது என்று அவரே ஒரு பேட்டியில் இந்த விஷயங்களை கூறியிருக்கிறார்.