ஜானகி அம்மா ஃபீல்ட் அவுட் ஆக முக்கிய காரணமே இந்த பாடகி தான்!! பாலச்சந்தரே ஒதுக்கிய நிலை..

Ilayaraaja Gossip Today
By Edward Dec 01, 2022 02:00 PM GMT
Report
155 Shares

தமிழ் திரையுலகில் அம்மா என்று கூறி அழைக்கப்படும் பாடகியாக பெருமைக்குறியவராக திகழ்ந்தவர் ஜானகி அம்மா. 1000 பாடலுக்கு மேல் பாடி பல மொழிகளில் கொடிக்கட்டி பறந்து வந்தார்.

அவரின் பெரும்பாலான பாடல்கள் இளையராஜாவின் இசையில் தான் பாடியிருக்கிறார். அதிலும் இயக்குனர் இமயம் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான படங்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது ஜானகி அம்மாவின் பாடல்கள்.

ஜானகி அம்மா ஃபீல்ட் அவுட் ஆக முக்கிய காரணமே இந்த பாடகி தான்!! பாலச்சந்தரே ஒதுக்கிய நிலை.. | Janakis Build Out An Opportunity Denied Person

அப்படி உச்சத்தில் இருந்த ஜானகி அவர்களின் கேரியர் உடைய சித்ராவின் குரல் உடைத்தது. 90களில் ஆரம்பத்தில் சித்ராவின் குரல் மிகவும் கவர்ந்திழுத்ததால் பல இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அவர் பக்கம் சென்று ஜானகியை ஒதுக்கி வைத்தனர்.

ரகுமான் இசையில் ஒருக்கட்டத்தில் ஜானகி அம்மாவால் ஈடு கொடுக்கமுடியாமல் போக சித்ராவின் குரல் ஓங்கியது. இப்படியிருக்கையில் ஜானகி - எஸ்பிபி என்று இருந்த காம்போ போகப்போக சித்ரா - எஸ்பிபி என்று மாறியது.

இதனால் தான் ஜானகி அவர்கள் 2016ல் மலையாள சினிமாவில் ஒரு தாலாட்டு பாடல் பாடி இனிமேல் பாடல் பாடப்போவதில்லை என்ற முடிவெடுத்தாராம்.