தமிழ்நாட்டை தாண்டி கர்நாடகாவில் மாஸ் காட்டும் விஜய்யின் ஜனநாயகன்!! வசூல் இவ்வளவா?
ஜனநாயகன்
நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் நேற்று ஜூலை 23 ஆம் தேதி ரிலீயாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தமிழ்நாட்டு அமைச்சர்களும் ஜனநாயகன் படத்தை பார்த்து எமோஷனலாகியும் வருகிறார்கள்.

இந்நிலையில், ஜனநாயகன் படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் ரூ. 6 கோடிக்கு மேலும் தமிழகம் முழுவதில் சுமார் ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளது என கூறிப்படுகிறது.
அதேபோல் கர்நாடகாவில் முதல் நாளில் மட்டும் ரூ. 11.57 கோடி வரை வசூல் வேட்டையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படங்களில் ஜனநாயகன் படம் 4வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இந்தியில் ரூ. 3 கோடியும், கேரளாவில் 5.8 கோடி ரூபாயும், தெலுங்கில் 4.5 கோடியும் வசூலித்திருக்கிறது.