ஜனநாயகன் படம் ரிலீஸ்!! ரசிகர்கள் இல்லாமல் காத்துவாங்கியதால், ரத்தான முதல் காட்சி
Vijay
H. Vinoth
JanaNayagan
By Jai
ஜனநாயகன்
நடிகர் விஜய்யின் கடைசி படமாக இன்று ஜூலை 23 ஆம் தேதி வெளியாகியுள்ளது ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பல நடித்துள்ள படம் பல போராட்டங்களுக்கு பின் ரீலீஸாகியிருக்கிறது.
படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் பலரும் பாசிட்டிவ் விமர்சனத்தை பகிர்ந்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படம் என்பதால் பலரும் கண்ணீர் விட்டு அழவும் செய்கிறார்கள்.

முதல் காட்சி ரத்து
இந்நிலையில், திருத்தணியில் கோல்டன் மினி சினிமா என்ற திரையரங்கின் ஒரு ஸ்கிரீனில் போதிய ரசிகர்கள் வராததால் ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றொரு திரையரங்கில் யாருமே இல்லாத போதிலும் திட்டமிட்டபடி திரையிடப்பட்டுள்ளது ஜனநாயகன் படம்.