ஜனநாயகன் பட லீக்!! விஜய் வாய் திறக்காமல் இருக்க இதான் காரணமாம்...
ஜனநாயகன் பட லீக்
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி மாறியது. அப்படி இருக்கையில் கடந்த வாரத்தில் ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் எச்டி தரத்தில் இணையத்தில் லீக்காகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதுதொடர்பாக மொத்த படக்குழுவினரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், போலிசார் 7 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், விஜய் ஏன் இது தொடர்பாக வாய் திறக்காமல் இருக்கிறார் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது விஜய்க்கு நெருக்கமானவர் ஒருவர் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக அமைப்பாளரும் துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா பிரச்சார மேடையில் பேசுகையில், ஜனநாயகன் படம் லீக்கானது குறித்து விஜய் இதுதொடர்பாக பேசாமல் இருக்கிறார்.
அதற்கு காரணம் அவருடைய முழு கவனமும் மக்கள் மீதும், ஒரு நல்ல அரசை கட்டமைப்பதன் மீதும் தான் இருக்கிறது. இதற்கிடையில் தன்னுடைய சொந்த லாப நஷ்டங்களை அவர் கருத்தில் கொள்ளவில்லை.

நான் எந்த இழப்பை வேண்டுமானாலும் சமாளித்துக் கொள்கிறேன், என் மக்களுக்காக மாற்றத்தை உருவாக்குவேன் என்று இருக்கிறார் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.