ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்..

Vijay Box office JanaNayagan
By Karthick Raja Aug 04, 2026 11:30 AM GMT
Report

விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்.. | Jananayagan Movie Worldwide Collection Report

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கிய உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது முதலமைச்சர் ஆகிவிட்டார். சந்தித்த முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியை பதிவு செய்து முதலமைச்சராகி சாதனை படைத்துள்ளார். விஜய் முதலமைச்சர் ஆனபின் அவருடைய கடைசி திரைப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானது.

ஜனவரி மாதமே இப்படம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து பல தடைகளை எதிர்கொண்டது. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பிறகு சென்சார் கிடைத்து ரிலீஸ் செய்யப்பட்டது.

ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்.. | Jananayagan Movie Worldwide Collection Report

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இருப்பினும், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் 13 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 293 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்.. | Jananayagan Movie Worldwide Collection Report