பிக்பாஸ் சீசன் 10!! வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட்..

Bigg Boss Vijay Television Farina Azad Janani Ashok Kumar
By Jai Aug 04, 2026 02:45 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 10

சின்னத்திரை ரசிகர்களின் ஆல் -டைம் ஃபேவரேட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். விரைவில் பிக்பாஸ் சீசன் 10வது நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. கடந்த 8 மற்றும் 9 சீசன்களை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி தான் 10வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

பிக்பாஸ் சீசன் 10!! வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட்.. | Bigg Boss Tamil Season 10 Contestants List

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 10ல் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியில் இல்லாத வகையில் சாமானிய மக்களும் கலந்துகொள்ளும் வகையில் காமன் மேன் வாய்ப்பை அறிமுகம் செய்திருந்தது.

இதற்கான பிரமோ வீடியோவும் வெளியானது. அதில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் நடித்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 10!! வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட்.. | Bigg Boss Tamil Season 10 Contestants List

இந்நிலையில், சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார், குக் வித் கோமாளி பிரபலமான டாலி, கேபிஒய் சரத், விஜய் டிவி ராமர் போன்றவர்களும் கலந்து கொள்கிறார்களாம். மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா அசாத் இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் போகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.