வசூல் வேட்டை நடத்தி வரும் ஜனநாயகன்.. 2 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பொங்கலுக்கு வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்கள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.