கண்ணுக்கு குளிர்ச்சியாக தனி தீவில் நான் அந்த நடிகருடன் இருக்க வேண்டும் - நடிகை ஜனனி
ஜனனி
பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ஜனனி. இதற்கு பின்னர் தெகிடி, 7த் டே, பாகன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.
இதைதொடரந்து கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 வில் பங்கேற்றார். அதில் அவர் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தார்.
தற்போது பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் நடித்துள்ளார். இப்படடம் விரைவில் வெளியாகுமென படக் குழுவினர் அறிவித்தனர். மேலும் யாக்கை திரி மற்றும் முன்னறிவாளன் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

கண்ணுக்கு குளிர்ச்சி
சமீபத்தில் இவரிடம், தனி தீவில் சிக்கிக் கொண்டால் யாருடன் இருக்க ஆசைபடுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
பதில் அளித்த அவர், " என் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க துருவ் விக்ரம் இருக்க வேண்டும் எனக்கூறியுளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        