எருமை மாடு!! எல்லைமீறி நடந்து கொண்ட ஜனனி! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..

Bigg Boss Myna Nandhini Rachitha Mahalakshmi Janany
By Jai Nov 29, 2022 07:11 AM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். 50 நாட்களை கடந்து சென்றுள்ள பிக்பாஸ் சீசன் 6ல் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டைவிட்டு அனுப்பப்பட்டார்.

50 நாட்களாகியும் இன்னும் யாரும் விளையாடவே இல்லை என்று கமல் ஹாசன் கூறி விமர்சித்தார். இப்படியிருக்கையில் இலங்கை போட்டியாளராக இருக்கும் ஜனனி ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக இருந்து வந்தார்.

தற்போது அவரின் சுயரூபம் தொடர்ந்து வெளிப்பட ஆரம்பித்துள்ளது. இதனை பிக்பாஸ் ரசிகர்கள் ரச்சிதாவின் ஆடையணிந்ததை பற்றி ஜனனி, தனலட்சுமியிடன் மோசமான வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

எருமை மாட்டுக்கு சுத்திவிட்டது போல் இருக்கிறது என்று ரச்சிதாவை படுகேவலமாக பேசியதை வைத்து நெட்டிசன்கள் ஜனனியை திட்டித்தீர்த்து வருகிறார்கள். அதன் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.