இப்படியொரு படத்தில் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர்? நயன்தாராவையே மிஞ்சிடுவாங்களோ
நடிகை நயன் தாரா நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் கோலமாவு கோகிலா. யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் 2018ல் வெளியானது.
போதை பொருளை கடத்தும் பெண்ணாக எப்படி பிரச்சனைகளை சமாளிக்கிறார் என்ற கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
சித்தார்த் சென் இயக்கத்தில் குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நயன் தாரா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையும் ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
நயன்தரா டூ ஜான்வி கபூர்
க்ளாமர் ரோலில் கலக்கி வரும் ஜான்வி கபூர் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குட் லக் பெர்ரி படம் வரும் ஜூலை 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.
நயன்தாரா அளவிற்கு இப்படத்தில் ஜான்வி கபூரின் நடிப்பு இருக்குமா இல்லை அவரை மிஞ்சுவாரா என்று படம் வெளியான பின் தான் தெரியவரும். தடக் படத்தில் நடிகையாக ஆரம்பித்து தற்போது பாவல் என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.