பாரிஸ் மாலில் இப்படியொரு ஆட்டம்! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வெளியிட்ட வீடியோ...

Sridevi Janhvi Kapoor
By Edward Jun 02, 2022 04:33 AM GMT
Report

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மறைந்த ஸ்ரீதேவி மகளாக பாலிவுட்டில் காலெடி பதித்தவர் ஜான்வி கபூர். பாலிவுட்டி தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய ஜான்வி, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நல்ல வரவேற்பு பெற்றார்.

க்ளாமரில் எக்கச்சக்க தாராளத்தை காட்டி வரும் அவர் இரவு பார்ட்டி, போட்டோஷூட் என்று ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் கரண் ஜோகர் பிறந்தநாளுக்கு படுமோசமான ஆடையில் வந்து வாய்ப்பிளக்க வைத்தார்.

இந்நிலையில் பிரபல நடிகர் வருண் தவானுடன் பாவல் என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு பார்ஸ் நகரில் நடக்கவுள்ள தால் கடந்த வாரம் இருவரும் விமானத்தில் சென்றனர்.

தற்போது பாவல் படத்தின் பிரமோஷன் செய்யாமல் வருண் தவான், கியாரா அத்வானி நடித்த Bhool Bhulaiyaa 2 படத்தில் JugJugJeeyo என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

பொது இடத்தில் ஒரு மாலில் ஷாப்பிங் செய்ய வந்தவர்களிடம் அவர் செய்த அட்ராசிட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.