காதல் வலையில் சிக்கிய ஜான்வி கபூர் - காதலன் எந்த நடிகர் தெரியுமா ?
Janhvi Kapoor
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். Mr. & Mrs. Mahi, Dostana 2 என பல ஹிந்தி படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
ஆனால் தென்னிந்திய நடிகர்கர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் நடிகர் விஜய்சேதுபதியுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது என பேட்டியில் கூறியுள்ளார். இவர் பதிவிடும் கவர்ச்சி போட்டோ ஷூட் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி இளைஞர்களை கவர்ந்துவருகிறார்.

காதல் கிசுகிசு
சமீபத்தில் ஜான்வி மாலத்தீவு சென்ற போது நடிகர் ஷிகர் பஹாரியாவுடன் டேட்டிங் செய்ததாக பாலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவியது.
இதை குறித்து இருவருமே பேசாத நிலையில், தற்போது ஜான்வி மற்றும் ஷிகர் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜோடியாக காணப்பட்டனர். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
