மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு இப்படிபட்ட கணவர் தேவையாம்? லிஸ்ட் போட்ட ஜான்வி கபூர்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து 80,90காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் துபாயில் மரணமடைந்தார்.
தனக்கு பின் தன் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார். அம்மா இறந்த சில வருடங்களில் மூத்த மகள் ஜான்வி கபூர் அப்பா போனி கபூரின் சம்மதத்துடன் தடக் என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ஜான்வி காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். க்ளாமரில் படுமோசமான போட்டோஷூட்டினை வெளியிட்டும் பார்ட்டிகளில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான ஆடையிலும் மிரட்டிய ஜான்வி கபூர் சமீபத்தில் தயாரிப்பாளர் கரண் ஜோகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கரண் ஜோகர் கேள்வியாக கேட்டுள்ளார். அதற்கு ஜான்வி, கணவராக வருபவர் திறமையானவராகவும் எந்த வேலை செய்தாலும் விருப்பமுடன் செய்பவராக இருக்க வேண்டும்.
அவரால் நான் சந்தோஷப்பட்டும் அவரிடம் எதாவது கற்றுக்கொள்ளவும் வேண்டும். இதுதவிர நகைச்சுவை உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட்டை போட்டு கொடுத்துள்ளார் ஜான்வி கபூர்.