அந்த நடிகர் வேண்டாம், இந்த நடிகர் ஓகே!! அதிரடி முடிவெடுத்த ஸ்ரீதெவி மகள் ஜான்வி கபூர்..

Janhvi Kapoor Bollywood Indian Actress N. T. Rama Rao
By Edward Mar 06, 2023 08:30 AM GMT
Report

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து டாப் இடத்தில் இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து இரு மகள்களை பெற்றெடுத்த ஸ்ரீதேவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அந்த நடிகர் வேண்டாம், இந்த நடிகர் ஓகே!! அதிரடி முடிவெடுத்த ஸ்ரீதெவி மகள் ஜான்வி கபூர்.. | Janhvi Kapoor Intro In South Indian Movie Actor

உயிரோடு இருக்கும் போது இரு மகள்களை அறிமுகப்படுத்தியதோடு சினிமாவில் நடிக்கவிடவில்லை ஸ்ரீதேவி. ஆனால் அம்மா இறந்த அடுத்த ஆண்டே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார் மூத்த மகள் ஜான்வி கபூர்.

தடக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வருண் தவானுடன் பாவல் என்ற படத்திலும் கமிட்டாகி நடித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷுடன் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியானது.

அந்த நடிகர் வேண்டாம், இந்த நடிகர் ஓகே!! அதிரடி முடிவெடுத்த ஸ்ரீதெவி மகள் ஜான்வி கபூர்.. | Janhvi Kapoor Intro In South Indian Movie Actor

ஆனால் அதெல்லாம் பொய் தென்னிந்திய படங்களில் தன் மகள் கமிட்டாகவில்லை என்று ஜான்வி தந்தை போனி கபூர் தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசையென்றும் வாய்ப்பு கிடைத்தால் ஆடிஷனில் கலந்து கொள்ள விருப்பம் என்று ஜான்வி கபூர் பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனுஷ் படமெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்ட ஜான்வி தற்போத்து ஜூனியர் என் டி ஆர்-ன் 30 வது படத்தில் கொரடெல்லா சிவா இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஜான்வி கபூர் அவரது சமுகவலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Gallery