அசிங்கமான நடனத்துக்கு விருதா? ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் செயலால் சர்ச்சை..
ஜான்வி கபூர்
திரைப்பிரபலங்கள் இணையத்தில் எது செய்தாலும் அது டிரெண்ட்டாகிவிடுகிறது. அந்தவகையில் நடிகை ஜான்வி கபூர் ஒரு பதிவிற்கு லைக் செய்தது தற்போது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலிவுட் நடிகைகளான ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீட்சித் இருவரையும் ஒப்பிட்ட ஒரு பதிவினை ஜான்வி கபூர் லைக் செய்துள்ளது தான் அதன் சர்ச்சைக்கு காரணம்.

அசிங்கமான நடனத்துக்கு விருதா
அதில், நடிகை மாதுரி தீட்சித் நடிப்பில் வெளியான பீட்டா படத்தின் பாடலான தக் தக் கர்னே லகா பாடலை வைத்தும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான குதா கவா படத்தில் வரும் காட்சியை வைத்து ஒப்பிட்டு வீடியோ ஒன்று வெளியானது.
மாதுரி தீட்சித்தின் அந்த பாடல், ஒரு மோசமான நடனம், அசிங்கமான அசைவுகள், படத்தில் எதுவுமே செய்யாமல் ஃபிலிம் ஃபேர் நடிகைக்கான விருதை வென்றது.
அப்படி இருக்கும் போது இருவரையும் இணைந்து ஒப்பிடப்பட்ட வீடியோவை ஜான்வி கபூர் எப்படி லைக் செய்தார் என்று விமர்சித்தும் சிலர் ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
குதா கவா படத்தில் ஸ்ரீதேவி, தென்னிந்திய நடிகை என்பதால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தையும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
