தங்கச்சியை ஏதாவது செய்தால் சும்மா விடமாட்டேன்! மறைந்த ஸ்ரீதேவி மகள்
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளாக பாலிவுட்டில் தடக் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ஜான்வி கபூர். தற்போது பாவல், குட் லக் ஜெர்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன் தங்கையை அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்த்து வருகிறேன்.
எனக்கு கலாய்ப்பவர்களை சுத்தமாக பிடிக்காது. என் தங்கச்சி குஷி கபூரை பற்றி ஏதாவது கலாய்த்தாலோ பேசினாலோ, கிண்டல் செய்தாலோ சும்மாவிட மாட்டேன் என்று கூறியுள்ளார். எனக்கு தி ஆர்ச்சீஸ் படத்தின் ஆடிஷனுக்கு என் தங்கச்சி போனது நினைவிருக்கிறது.
அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டி விரும்பி இருந்தால். தற்போது அப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.
தி ஆர்ச்சீஸ் படத்தில் ஜோயா கதர் இயக்கத்தில் குஷி கபூர், ஷாருக்கான் மகள் சுஹானா கான், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.