ஆளப்போறான் தமிழன் மகனுக்கு தமிழ் படிக்க தெரியாதா!! விஜய் மகன் சஞ்சய்க்கு ஏற்பட்ட சிக்கல்..
நடிகர் விஜய் தன் மகன் சஞ்சய் சிறுவனாக இருந்த போது வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் ஆட வைத்தார். அதன்பின் தன் மகனை படிப்பில் கவனம் செலுத்த வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு பின் விஜய் தன் குடும்பத்தை கவனிக்கவில்லை என்று சமீபகாலமாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
சமீபத்தில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், சினிமா பட்டப்படிப்பை முடித்து இயக்குனராக குறும்படங்களை இயக்கி வந்தார். அதன்பின் விஜய் மனைவி சங்கீதாவின் சிபாரிசு மூலம் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க கமிட்டாகினார். படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் விஜய் இல்லாமலே நடந்து முடிந்தது.
இந்நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள விஜய் மகன் சஞ்சய் படத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதாவது, அக்டோபரில் கதையை முடித்துவிடுகிறேன் என்று சொல்லி டிசம்பர் மாதத்தில் முடிக்கிறேன் என்று கூறியிருந்தாராம் சஞ்சய்.
ஆனால் வெளிநாட்டில் படித்து பழகிய சஞ்சய்-க்கு தமிழ் படிக்க எழுத தெரியாததால் ஆங்கிலத்தில் கதையை எழுதி இருக்கிறார். அவர் ஆங்கிலத்தில் எழுத அதை வேறொருவர் தமிழில் மொழிப்பெயர்த்து எழுதி கொடுக்கவுள்ளாராம்.
இதனால் படத்தின் கதை முடிக்க சில மாதங்கள் ஆகும் என்றும் கூறி வருகிறார்கள். இதனால் லைக்கா நிறுவனமும் சற்று குழப்பத்தில் இருக்கிறார்களாம்.
என்ன தான் அப்பா விஜய், அளப்போறான் தமிழன் என்று கூறி நடிப்பவர். அப்படி இருக்கும் விஜய் மகனுக்கு தமிழ் படிக்க வராது என்பதை எப்படி மறந்தார் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.