தாத்தாவும் இல்ல அப்பாவும் இல்ல!! சஞ்சய் இயக்குனராக காரணமே இவர்தான்...
எஸ் ஏ சந்திரசேகர் தன் மகன் விஜய்யை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு வர காரணமாக இருந்தார். அதேபோல் விஜய்யும் தன் மகன் ஜேசன் சஞ்சய்யை சினிமாவில் பிரபலப்படுத்த வெளிநாட்டில் சினிமா பட்டப்படிப்பை படிக்க வைத்தார்.
அதன் பலனாக சஞ்சய் குறும்படம் இயக்கி வந்த நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட படத்தினை இயக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதற்கு காரணம் தாத்தா எஸ் ஏ சி-யும், அப்பா விஜய்யும் தான் காரணம் என்று சிலர் கருத்துக்களை கூறி வந்தனர். அதுதான் உண்மை இல்லையாம்.
மகனை இயக்குனராக்க ஆசைப்பட்டதே விஜய்யின் மனைவி சங்கீதா தானாம். சங்கீதா சிபாரிசின் பேரில் தான் லைக்கா நிறுவனம் பல கோடி செலவு செய்ய மு முன் வந்திருக்கிறார்களாம்.
ஏற்கனவே விஜய்யின் பல படங்களின் கதை மற்றும் சில முக்கிய வேலைகளை சங்கீதா தான் பார்த்து வந்துள்ளார். அதேபோல் தான் மகன் சஞ்சய் விசயத்திலும் சங்கீதா இப்படியொரு முயற்சி செய்திருக்கிறார் என்று நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.
You May Like This Video