நடிகருடன் காதல் உறவில் இருந்த ஐஸ்வர்யா ராய்!.. இதனால் மாமியார் கொடுத்த டார்ச்சர்!
1994 -ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வாங்கி உலகம் முழுவதும் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இவர் 1997 -ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'இருவர்' படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்தார். இதன் பின் பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார்.
ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை 2007 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இவர்களின் திருமணத்திற்கு முன்பு நடிகர் சல்மான் கானை ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்தார். சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் பிரிந்தனர்.
இதனால் ஐஸ்வர்யா ராய்யை மருமகளாக ஏற்க அபிஷேக் பச்சனின் அம்மா விரும்பவில்லை. மேலும் அபிஷேக் பச்சன் வாழ்க்கை இதனால் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் திருமணத்திற்கு நோ சொன்னாராம்.
அப்போது ஐஸ்வர்யா ராய் கொஞ்சம் கொஞ்சமாக மாமியாரிடம் நல்ல பேர் வாங்கி திருமணத்திற்கு ஓகே சொல்லவைத்தாராம்.