விவகாரத்து விவகாரம்!! நேரில் ஆஜராகாத ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி சொன்ன விஷயம்..
விவகாரத்து விவகாரம்
நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை திருமணம் செய்து 15 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக கூறி அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து தனக்கு தெரியாது, எனக்கு விருப்பம் இல்லை, அவருடன் பேச தயார் என்றும் இதனால் நானும் என் குழந்தைகளும் கஷ்டப்பட்டு வருகிறோம் என்றும் ஆர்த்தியும் தன் பங்கிற்கு அறிக்கை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து ஜெயம் ரவி கடந்த மாதம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். நவம்பர் 15 ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகும் படி கூறியிந்தனர். ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியும் ஆர்த்தி காணொலி மூலம் ஆஜராகியும் இருந்தனர்.
ஆர்த்தி சொன்ன விஷயம்
விசாரணையில் இருவரிடையே இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்திரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் இருக்க ஆர்த்தி ஒரு காரணத்தை கூறியிருக்கிறார்.
ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அன்றைய தினம் பேச்சு வார்த்தைக்கு வரமுடியவில்லை என்றும் எனவே பேச்சுவார்த்தையை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்பின், ஜெயம் ரவியிடம் 10 நிமிடங்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதி விசாரனையை நவம்பர் 27 ஆம் தேதி 4 மணிக்கு தள்ளி வைத்துள்ளனர்.