மனைவியுடன் விவாகரத்து.. பாடகியுடன் கோவாவில் தனிக்குடித்தனம் நடத்திய ஜெயம் ரவி!! வெளியான ரகசியம்..

Jayam Ravi Gossip Today Divorce Tamil Singers Aarti Ravi
By Edward Sep 18, 2024 05:30 AM GMT
Report

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்த 15 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையை முறித்திக் கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

இந்த விஷயத்திற்கு என் குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்றும் அவரின் தனிப்பட்ட முடிவு என்றும் மனைவி ஆர்த்தி ஆதங்கத்துடன் இதற்கு பதிலும் அளித்திருந்தார். இவர்களின் விவாகரத்துக்கு காரணம் ஜெயம் ரவியின் மாமியார் தான் காரணம் என்று பலர் பலவிதமான கருத்தினை கூறி வருகிறார்கள்.

மனைவியுடன் விவாகரத்து.. பாடகியுடன் கோவாவில் தனிக்குடித்தனம் நடத்திய ஜெயம் ரவி!! வெளியான ரகசியம்.. | Jayam Ravi Affair With Singer Kenisha Aarti Issues

பாடகி கெனிஷா

இந்நிலையில், ஜெயம் ரவி சில மாதங்களுக்கு முன் கோவா அவுட்டிங்கிற்கு மனைவிக்கு தெரியாமல் சென்றிருக்கிறார். பெங்களூருவை சேர்ந்த பாடகி கெனிஷா, கோவா பப்புகளில் பாடி வந்திருக்கிறார். இவர் ஆல்பம் பாடல்களிலும் பாடியும் தமிழில் நடிகர் ஜீவா தயாரித்த ஆல்பத்திலும் பாடி இருக்கும் பாடகி கெனிஷா, ஏற்கனவே திருமணமானவர். அப்படி அவர் பாடி வந்த பப்பில் ஜெயம் ரவி எதர்ச்சியாக சந்தித்துள்ளார்.

ஆர்த்திக்கு காட்டிக்கொடுத்த SMS

அவர் குரலுக்கு ரசிகராக இருந்தவர் பின் தோழியாக மாறி, அந்த பாடகியுடன் நெருக்கம் காட்டியிருக்கிறார் ஜெயம் ரவி. ஜூன் மாதம் நடந்த தன்னுடைய திருமண நாளில் கூட ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் இல்லாமல் கோவாவிற்கு பறந்திருக்கிறார்.

ஷூட்டிங் என்று கூறி சென்றுள்ள ஜெயம் ரவி எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து கோவாவிற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆர்த்தி பேரில் வாங்கிய ஆடி காரில், தடை செய்யப்பட்ட கருப்பு நிற சன் ஃபில்டர் பேப்பர் ஒட்டப்பட்டதாக கூறி, Fine போட்டுள்ளனர் போலீசார்.

மனைவியுடன் விவாகரத்து.. பாடகியுடன் கோவாவில் தனிக்குடித்தனம் நடத்திய ஜெயம் ரவி!! வெளியான ரகசியம்.. | Jayam Ravi Affair With Singer Kenisha Aarti Issues

இது ஆர்த்தியின் பெயரில் வாங்கிய கார் என்பதால், நேரடியாக அவருக்கு தான் SMS சென்றுள்ளது. இதுகுறித்து ஆர்த்தி, ஷூட்டிங் என்று கூறி கோவா சென்றது ஏன் என்று ஜெயம் ரவியிடம் கேள்விகள் கேட்டு சண்டைப்போட்டுள்ள்ளார்.

கோவாவில் குடும்பம் நடத்திய ஜெயம் ரவி

யாருடன் இருந்தார் என்று தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அறிந்த ஆர்த்தி, கெனிஷாவின் பெயர் அடிப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் கெனிஷா மட்டும் தன்னுடன் இல்லை, பல நண்பர்களும் இருந்ததாக கூறி சமாதானம் செய்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த பிரச்சனை ஓய்ந்த 10 நாட்கள் கழித்து, ஜூன் 24ஆம் தேதி, ஆர்த்தியின் செல்ஃபோனுக்கு ஜெயம் ரவி பயன்படுத்தும் கார் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகத்தில் சென்றதாக SMS வர காரை ஓட்டி சென்றது கெனிஷா என்பதும் தெரியந்துள்ளது.

மனைவியுடன் விவாகரத்து.. பாடகியுடன் கோவாவில் தனிக்குடித்தனம் நடத்திய ஜெயம் ரவி!! வெளியான ரகசியம்.. | Jayam Ravi Affair With Singer Kenisha Aarti Issues

ஏற்கனவே கோபத்தில் இருந்த ஆர்த்தி இந்த விஷயம் அறிந்ததும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அனைத்து புகைப்படங்களையும் அப்போது தான் டெலீட் செய்திருக்கிறார். கோவாவிற்கு எப்போது சென்று தங்கும் ஓட்டலில் தங்காமல் பாடகி கெனிஷா என்பவருடன் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி ஜெயம் ரவி குடும்பம் நடத்தி வருவதாக சில தகவல்கள் வந்தாலும் அதிகாரப்பூர்வ தகவலாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery