மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த ஜெயம் ரவி.. முடிவுக்கு வந்த 15 வருட திருமண வாழ்க்கை
Jayam Ravi
Actors
Divorce
By Karthick Raja
திரையுலகில் பிரபலமான நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், ஜெயம் ரவி தரப்பில் இருந்தோ, அல்லது ஆர்த்தியின் தரப்பில் இருந்தோ எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், இன்று செப்டம்பர் 9ஆம் தேதி நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
