பீர் குடித்து தொப்பை ஏற்றிய பொன்னியின் செல்வன் நடிகர்.. வாங்கி கொடுத்ததே இவர்தான்..
இயக்குனர் மணிரத்னம் செக்க சிவந்த வானம் படத்தினை தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் கல்கியால் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எடுக்க ஆரம்பித்தார்.
ஆழ்வார்க்கடியான் நம்பி
இரு பாகங்களாக உருவாகியுள்ள இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள் படக்குழுவினர்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற முக்கிய ரோலில் நடித்த நடிகர் ஜெயராம் பேட்டி ஒன்றில் தொப்பை ஏற்ற என்ன செய்தேன் என்று கூறியுள்ளார்.
அதில், பொன்னியின் செல்வன் படத்தில் கமிட்டாகுவதற்கு முன், உடலை கட்டுக்கோப்பாக வைத்து சிக்ஸ்பேக் வைத்திருந்தேன்.
தாய்லாந்தில் பியர்
அப்போது மணி சார் கூப்பிட்டு, 2 வருடத்திற்கு குடும்பி மட்டும் தான் இருக்கும். பெரிய அளவுக்கு தொப்பை வேண்டும் என்று கூறினார்.
இதற்காக சாப்பாடு சாப்பிட்டேன். எனக்கு மட்டும் தாய்லாந்தில் பியர் கொடுத்து அனுப்புவார் மணி சார் என்று கூறியுள்ளார். அதை குடித்து தான் தொப்பை ஏற்றி இருக்கிறார் ஜெயராம் அவர்கள்.
