கார்த்திக் சுப்புராஜ் என்னை தாங்கினார்!! திருநங்கை நடிகை ஜீவா போட்ட பதிவு..
டோரதி படத்தை இயக்கி நல்ல பெயரை எடுத்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விவாத நிகழ்ச்சியில் திருநங்கையிடம் இயக்குநர் மோகன் ஜி கொச்சைத்தனமாக பேசியதை கண்டிருந்திருந்தார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் குறித்து உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார், நடிகையும் திருநங்கையுமான ஜீவா சுப்ரமணியம்.

ஜீவா சுப்ரமணியம்
அதில், என் இரு பிள்ளைகள், என்னை தாங்கிய என் அன்புத்தம்பி, சில உறவுகள் ரத்தத்தால் உருவாவதில்லை. அன்பால் உருவானகின்றன. சிலர் நம் வாழ்க்கையில் வரும்போது, நாம் எதிர்பார்த்திராத அளவுக்கு நம்மை அன்பால் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சில உறவுகளுக்கு நன்றி சொல்வதற்கு வார்த்தைகளே போதாது. என் அன்புத் தம்பி கார்த்திக் கார்த்திக் சுப்புராஜ், என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்களில் இன்று நீங்கள், தம்பி.
என்னை ஒரு கலைஞராக மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக, உங்கள் சகோதரியாக, உங்கள் அன்புக்குரியவளாக நீங்கள் பார்த்துக்கொண்ட விதத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாதது. என் இரு பிள்ளைகளும் என்னை ஒரு தாயாக மாற்றிவிட்டார்கள், ஆனால் அந்த தாயையும் ஒரு குழந்தையை போல் அன்போடு தாங்கிப் பிடித்துக் கொண்டவர் நீங்கள்தான் தம்பி.

சில சம்யத்தில் நமக்கு தேவைப்படுவது பெரிய உதவிகள் அல்ல, நம்மை அன்போடு பார்த்துக் கொள்ளும் சில இதயங்கள்தான். அந்த அன்பையும் அரவணைப்பும் உங்களிடமிருந்து நான் நிறையவே பெற்றிருக்கிறேன். நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், நீங்கள் எனக்கு கொடுத்த அன்பின் முன்னால் மிகச்சிறியதுதான். நன்றி தம்பி, என்னை உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டதற்கு, என்னை அன்பால் தாங்கிப் பிடித்ததற்கு, என் மனதில் என்றும் அழியாத ஓர் இடத்தை பெற்றுக் கொண்டதற்கு என முகநூலில் ஒரு நீண்ட பதிவினை பகிர்ந்துள்ளார்.