18 லட்சம் கோடி சொத்து மதிப்பு! 61 வயதில் 55 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட Jeff Bezos
டாப் 10 உலக பணக்காரர்களில் ஒருவர் Jeff Bezos. அமேசான் அதிபரான இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 18 லட்சம் கோடி என கூறப்படுகிறது.
1993ம் ஆம் ஆண்டு MacKenzie Scott என்பவரை Jeff Bezos திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், கடந்த 2020ல் இருந்து Lauren Sánchez என்பவருடன் டேட்டிங் செய்து வந்துள்ளார்.
அதே 2019ம் ஆண்டு Lauren Sánchez-வும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். 2023ம் ஆண்டு Lauren Sánchez மற்றும் Jeff Bezos நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில் அமேசான் அதிபர் Jeff Bezos மற்றும் Lauren Sánchez ஆகியோர் நேற்று (27.06.2025) இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
வெனிஸில் நடைபெறும் Jeff Bezos - Lauren Sánchez திருமணத்துக்கான செலவு இந்திய மதிப்பில் ரூ. 430 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.