உன் மச்சங்களை பார்க்கலாமான்னு கேட்ட நடிகர்!! தங்கச்சி முன்பே கூறிய ஜான்வி கபூர்..
ஜான்வி கபூர்
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் பெத்தி திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. பாலிவுட் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஜான்வி கபூர் விரைவில் தமிழில் என்ட்ரி கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், காபி வித் கரண் நிகழ்ச்சியில் தன்னுடைய தங்கை குஷி கபூருடன் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். ரேபிட் ஃபயர் சுற்றில் உங்களுக்கு வந்ததில் மிகவும் வித்தியாசமான பிளர்ட்டிங் மெசேஜ் எது என்று கரண் ஜோஹர் கேட்டுள்ளார்.
மச்சங்களை பார்க்கலாமா
அதற்கு ஜான்வி சிரித்தபடி, அருகில் இருந்த தன் தங்கை குஷியை பார்த்து, நான் இதை சொன்னால் நீ என்னை திட்டுவாய் என்று கூறினார். அதன்பின் பேசிய ஜான்வி, ஒரு பிரபல நடிகர், உன் உடலில் இருக்கும் மச்சங்களை நான் பார்க்கலாமா? என்று எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார் என்று ஜான்வி கூற கரண் ஜோஹர் ஆச்சரியமடைந்தார்.

அப்படியா உனக்கு எத்தனை மச்சங்கள் இருக்கிறது என்று காமெடியாக கேட்க, அதற்கு ஜான்வி நிறையவே இருக்கிறது என்று சிரித்தபடி பதிலளித்தார். அவரின் இந்த பதில் அரங்கில் இருந்தவர்களை அதிரவைத்தது. ஆனால் மெசேஜ் அனுப்பி அந்த இயக்குநர் யார் என்பதை ஜான்வி கபூர் வெளிப்படையாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Jhanvi Kapoor about receiving a flirty message from an bollywood actor..
— The Gossip Queen 👸 (@thegosssipqueen) July 24, 2026
What kind of flirty messages are these, bro? Cringe max level..💀🤦♂️ What do some actors really want to prove by sending such cringe lines?? pic.twitter.com/mIsKjACAHz