IND vs NZ இறுதிப் போட்டி!! JioStar 10 விநாடி விளம்பர கட்டணம் இத்தனை லட்சமா?
IND vs NZ
உலக கோப்பை டி20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. இறுதி போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் அடித்து நொறுக்கியது.

இதனையடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி வீரர்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஆடினாலும் 159 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் கொடுத்து தோல்வியடைந்தது. 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்று உலக கோப்பை டி20 கோப்பையை 3வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்திய அணி வெற்றி
வெற்றிப்பெற்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் சுமார் ரூ.131 கோடி ரொக்கப்பரிசை அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக வீரர்கள், தேர்வாளர்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்துவதாகவும் தெரிவித்தது.

இது ஒருபக்கம் இருக்க, இந்தியா - நியூசிலாந்து இறுதி போட்டியை ஜியோ ஸ்டாரில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. ஜியோ ஸ்டாரில் இடையில் ஒளிபரப்பப்படும் விளம்பரத்திற்காக வெறும் 10 விநாடிக்கு ரூ. 50 லட்சம் வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டின் வணிக மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை இந்த எண்ணிக்கை தெளிவாக காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது.