குழந்தையோடு வந்த அம்மாவே ஓடிட்டாங்க!! கமல் குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கில்லாதவர் என பேசிய நடிகர்
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் பற்றி பல பாராட்டி பேசுவார்கள். ஆனால் தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்ட பலர் அவரை எதிர்க்கவும் செய்திருக்கிறார்கள். அப்படி கமல் ஹாசன் குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கில்லாதவர் என்று சர்ச்சையாக பேசியிருக்கிறார் நடிகர் ரித்தீஷ்.

சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் மறைந்த ரித்தேஷ், நடிகர் சங்கம் தேர்தலின் போது கமல் ஹாசன் மீது வன்மத்தில் இருந்துள்ளார்.
அப்போது கமல் ஹாசன் அரசியலில் வருவதை பற்றி அவதூறாக பேசி சர்ச்சையிலும் சிக்கியதோடு பணமோசடியிலும் சிக்கி கைதும் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ரித்தீஷ் பேசிய ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில், கமல் சார், யாரை பற்றி குறை சொல்லும் போது நாம எப்படி இருக்கிறோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

அவரை நம்பி யாரும் படம் எடுக்கவில்லை, எந்த தயாரிப்பாளரும் தேடிவருவதில்லை. நடிகனாக இருக்கும் நீங்கள், வாழ்க்கை மற்றும் குடும்பத்தை யோசித்து பாருங்கள்.
அதுல ஒழுங்கா இருக்கோமா என்று பாருங்கள் என்றும் உங்க குடும்பமும் போச்சு, குழந்தையோடு வந்த அம்மாவும் போச்சு என்றும் விமர்சித்து பேசியுள்ளார்.