'தமிழில் எல்லாம் நடிக்க மாட்டேன்' என சொன்ன நடிகருக்கு Tamilrockers கொடுத்த ஷாக்
தற்போது தென்னிந்திய சினிமா ஹீரோக்களின் படங்கள் பெரிய அளவில் பேசப்படும் அளவுக்கு வளர்ந்து வருகின்றன. விஜய் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினால் அதை பாலிவுட் ஹீரோக்கள் வரை பலரும் ஆடி ரீல்ஸ் வெளியிடுகிறார்கள்.
தென்னிந்திய படங்களுக்கு, குறிப்பாக தெலுங்கு படங்களுக்கு, அதிகம் மார்க்கெட் ஹிந்தியில் கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் ஹிந்தியில் 100 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது. அந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட் போன்றவர்கள் சின்ன ரோலில் நடித்து இருந்தார்கள்.
நடிகர் ஜான் ஆப்ரஹாம் 'அட்டாக்' பட ப்ரோமோஷனுக்கான பேட்டியில் தான் இப்படி தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என கூறி இருந்தார். "நான் ஹிந்தி நடிகன், இப்படிபட்ட தெலுங்கு, தமிழ் படங்களில் 2ம் ஹீரோவாக நடிக்க மாட்டேன்" என கூறினார்.

இந்நிலையில் அட்டாக் படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. படத்திற்கும் நல்ல விமர்சனமும் கிடைத்து வருகிறது. ஆனால் படம் வந்த சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் அதை லீக் செய்து விட்டது.
இதனால் படத்தில் வசூலில் பாதிப்பு நிச்சயம் இருக்கும் என கூறப்படுகிறது.