இப்படி விஜயகாந்தை துன்புறுத்தி ஒரு அரசியல் தேவையா? கண்ணீர் விட்டு கதறும் தொண்டர்கள்..

Vijayakanth
By Edward Aug 17, 2022 01:10 PM GMT
Report

தமிழகத்தில் கேப்டன் என்ற அந்தஸ்த்தோடு 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். கம்பீரமான பேச்சு நடை என்று இருந்த விஜயகாந்த் அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு சினிமாவிலும் அரசியலிலும் விலகி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சகாப்தம் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியது தான் கடைசியாக இருந்தது. தேமுதிக கட்சியினை அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினர் கவனித்து வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு கூட அவரின் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பலரை அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி உடல் நிலை பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 கால் விரல்கள் நீக்கப்பட்டது.

இதன்பின் தேறிவந்த விஜயகாந்த் 75 வது சுதந்திர தின விழாவில் மனைவியுடன் சேர்ந்து கொடி ஏற்றிய வீடியோ வைரலானது. கையசைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்திய விஜயகாந்தை பார்த்து பலர் கண்ணீர் மல்க அழுதனர்.

இந்த வீடியோவை பார்த்த இயக்குனர் மகேந்திரன் டிவிட்டர் பக்கத்தில், மனதிற்கு கஷ்டமாக உள்ளது, இப்படி அவரை துன்புறுத்தி அரசியல் செய்ய வேண்டுமா.. அவர் இளைப்பாற விடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.