காசுக்கொடுக்காமல் ஏமாற்றி எஸ்கேப்பான தயாரிப்பாளர்! புலம்பித்தள்ளிய நடிகர்..
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி வில்லன் கதாபாத்திரத்திமானாலும் சரி கச்சிதமாக செய்து முடித்து நல்ல பேர் வாங்கியவர் நடிகர் ஜான் விஜய்.
தலைமகன் படத்தில் ஆரம்பித்து, பில்லா, ராவணன், கபாலி, துப்பறிவாளன், கடைக்குட்டி சிங்கம், சாமி 2 , சார்ப்பட்டா பரம்பறை, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் சினிமாவில் ஏமாந்து போன சம்பவத்தை கூறியுள்ளார். சம்பளமாக செக் வாங்கி பவுன்ஸ் ஆகிவிடும். அதேபோல் தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்காமல் ஓட்டலில் அடமாடம் வைத்தும் சென்றிருக்கிறார்கள்.
ஒரு இயக்குனர் என்னை வைத்து 18 நாட்கள் படமெடுத்தார். சிறப்பாக நடித்த இப்படத்தை அதிகமாக எதிர்ப்பார்த்தேன். அதற்காக இயக்குனர் 60 ஆயிரம் என்னிடம் பெற்றார்.
ஆனால் படத்தின் ஆரம்பத்தில் நடித்த சில நொடிக்காட்சிகள் தான் வந்தது. அப்படியே என்னுடைய காட்சிகள் கட் செய்து படத்தை வெளியிட்டுள்ளார் என ஜான் விஜய் கூறியுள்ளார்.