அனிருத் - காவ்யா திருமண வரவேற்புக்கு சென்று வாழ்த்திய பாடகி ஜோனிடா காந்தி!!
இசையமைப்பாளர் அனிருத் - கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த நவம்பர் 21 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான முறையில் நடந்தது. பல நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், பாடகி ஜோனிடா காந்தி, புதுமணத்தம்பதியினரை சந்தித்து புகைப்படம் எடுத்ததை பகிர்ந்துள்ளார்.
அனிருத் - காவ்யா
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி கிரீஸ் நாட்டில் பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடந்த திருமண புகைப்படத்தை அனிருத் சோசியல் மீடியாவில் பகிர்ந்தார்.

இதனை தொடர்ந்து நவம்பர் 21 ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைத்துறை, அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என நேரில் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஜோனிடா காந்தி
இதனையடுத்து அனிருத் இசையில் பல பாடல்களை பாடிய பாடகி ஜோனிடா காந்தி, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். மணமக்களை வாழ்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களை வாழ்த்தி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2022 - 23 காலக்கட்டத்தில் இருவரும் காதலித்து வந்தார்கள் என்ற வதந்திகள் பரவியது. அதுமட்டுமில்லாமல் சில நாட்களாக ஜோனிடா காந்தி இன்ஸ்டாகிராமில் சோகத்துடன் சில பதிவுகளை பகிர்ந்து வந்ததை வைத்து காதல் தோல்வியில் இருப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.