குரங்குகளை மக்களுடன் ஒப்பிடாதீங்க!! நடிகை திரிஷாவின் அதிரடி ஸ்டோரி..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா கிருஷ்ணன் பெயரில் இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்ற நற்பணி மன்றத்தை திருநெல்வேலியை சேர்ந்த தொழிலதிபர் தலைமையில் தொடங்கப்பட்டது.

இளைய புரட்சித்தலைவி திரிஷா
இதுகுறித்து இணையத்தில் விவாதமாக மாறியதோடு, தவெக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்யுடன் இணைந்து திரிஷா அரசியலில் ஈடுபடுவாரோ என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத திரிஷா கார்த்திகை தீபம் அன்று கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார்.
குரங்கோடு ஒப்பிடாதீங்க
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்கு புகைப்படத்தை பகிர்ந்து, மனிதர்களை குரங்குடன் ஒப்பிட வேண்டாம் என்ற கேப்ஷனை போட்டுள்ளார்.

எதற்காக இதை பகிர்ந்தார் என்ற கேள்வி எழுந்த நிலையில், திமுக ஐடி விங்க்ஸ் டீம் குரங்கு கையில் மாலை இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்ததை வைத்து தான் திரிஷா இப்படியான பதிவை பகிர்ந்துள்ளார் என்றும் கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.