அனிருத்தை கல்யாணம் செய்ய ஆசைப்படும் இளம் நடிகை.. அட, இவரா
Anirudh Ravichander
Jonita Gandhi
By Karthick Raja
சமீபகாலாமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் இணையத்தில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், இளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தியிடம், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி கேட்டப்பட்டுள்ளது.
சூர்யா, ரன்வீர் சிங், அல்லது அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டதற்கு, " இந்த மூவரில் அனிருத்துக்கு மட்டும் தான் இதுவரை திருமணம் நடக்கவில்லை, அந்த காரணத்தினால் மட்டும் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளிக்கிறேன் " என்று கூறியுள்ளார்.
இவர் தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
