தயாரிப்பாளர் தலையில் துண்டு.. ஜோஷ்வா படத்தின் விமர்சனம் - Roast Review
காதல் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், இளம் ஹீரோ வருண் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தின் விமர்சனத்தை தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்.
படத்தின் கதை
ஓபன் பண்ணா ஹீரோ, ஹீரோயின் லவ் சீன், அது க்லோஸ் பண்ணா சண்டை, அது அப்பறோம், சண்டை சரி அது அப்பறோம் சண்டை, அட போங்கய்யா என சொல்லும் அளவிற்கு படம் முழுக்க சண்டை தான்.
கடைசில ஆபத்தில் இருந்து ஹீரோயினை காப்பாற்றினாரா ஹீரோ என்பதே ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தின் கதை.
Roast Review
கதாநாயகனை பற்றி சொல்லனும்னா, சண்டை காட்சிகளை தெறிக்க விடுகிறார், மகேஷ் பாபு போல் நவரசத்தையும் முகத்தில் காட்டுகிறார். சரி ஹீரோ பத்தி சொன்னதும் இருக்கட்டும், ஹீரோயின் பத்தி சொல்லுயா.. சரி சொல்லிடுவோம்..
அது எப்படி திமிங்கலம் கவுதம் மேனன் படத்தில் வரும் ஹீரோயின் மட்டும் அழகா இருக்காங்கனு, பலரும் கேள்வி கேட்டுருக்காங்க. அத மறுபடியும் பக்காவா செய்து காட்டியிருக்காரு கவுதம்.
அட, ஆமாங்க அழகாக வந்த நடிகை ராஹி இளைஞர்கள் மனசுல இடம் பிடிச்சிட்டாங்க. இது சந்தோசமான செய்தி தான். ஆனா என்ன இப்போ ஆரவ்வ கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிட்டாங்க, சினிமா பக்கம் இனி எட்டி பாப்பாங்களானு தெரியல.
வில்லன் அப்படினு சொல்லிட்டு வந்த கிருஷ்ணா, அப்படியே சொல்லிட்டு போய்ட்டாரு, ஏன் வந்தாரு எதுக்கு வந்தாருனு தெரியல.
பாடல்கள், பின்னணி இசை என்னம்மா போட்ருக்காருப்பா இசை, அதுவும் அந்த 44.37 நிமிஷத்துல வந்த பின்னணி இசை இருக்கு பாரு, வேற லெவல். அப்படினு சொல்ல எதுவுமே இல்லை. படத்துக்கு மிகப்பெரிய சூனியம் வெச்சதே, பின்னணி இசை தான்.
நம்ம ரொமான்டிக் இயக்குனர் கவுதம் மேனன், பாவம்யா அப்படினு தான் இவர பாத்தா சொல்ல தோணுது, எனை நோக்கி பாயும் தோட்டா லேட்டா வந்து சத்திய சோதனையில் சிக்கிச்சினு பாத்தா, இப்போ ஜோஷ்வா. அடுத்து துருவ்வ்வ்.. நான் சொல்லமாட்டேன்.
ஹாலிவுட்ல பார்த்து சலித்து போன திரைப்படம் தான் ஜான் விக். பார்ட் 1,2,3,4 எல்லா படத்திலும் ஜான் விக் சண்டை போடுவதை பார்த்து நமக்கே சோர்வு ஏற்படும், எப்போதான்டா சண்டைய முடிப்பீங்க அப்படினு தோணும்.
அதே போல் தான் ஜோஷ்வா படத்திலும் திகட்ட திகட்ட சண்டை காட்சிகள் நிறைந்து இருக்கு.
மொத்தத்தில் ஆக்ஷன் பிடிக்கும்னா தைரியத வளர்த்துக்கிட்டு தியேட்டர் குல்லப்போ..