விஜய் நடிகைகள் பின் அலைபவரா?.. பிஸ்மி கொடுத்த பதிலடி
விஜய்
விஜய் தற்போது அரசியல் மற்றும் சினிமா என மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது, அவரது கடைசி தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
அதே சமயம் அரசியல் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீப நாட்களாக விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.
அதை தொடர்ந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் ஆகியோர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரே இடத்தில் காணப்பட்டதால் அதற்கும் பலர் விமர்சனம் செய்து வந்ததை நம்மால் காண முடிந்தது.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பிஸ்மி பதிலடி
அதில், " விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் ரூட் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். அந்த நிறுவனத்தில் தான் பொங்கல் விழா நடத்தப்பட்டது. அதில் தான் கீர்த்தி சுரேஷ் அவருடைய கணவருடன் கலந்து கொண்டார்.
விஜய் ஜெகதீஷ் நடத்தும் பொங்கல் விழா என்பதால் தான் விழாவில் கலந்து கொண்டார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் வளர்ச்சி திமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் விஜய்க்கு பெண் பித்தர், நடிகைகள் பின் அலைபவர் என்று பிம்பம் குத்த ஒரு கூட்டம் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.