இப்தார் நோம்பை இழிவுப்படுத்திய விஜய்? வெளுத்து வாங்கிய பிரபலம்
விஜய்
நடிப்பு மற்றும் அரசியல் என பிஸியாக வலம் வருகிறார் விஜய். இவர் நடிப்பில் தற்போது அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
அதே சமயம் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளிலும் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிடுவது இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது என அவரது கட்சிக்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த இப்தார் நோம்பு நிகழ்ச்சிக்கு பின் விஜய் குறித்து பலர் விமர்சித்து பேசி வருகின்றனர். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் அந்தணன் விஜய் குறித்து வீடியோ ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெளுத்த பிரபலம்
அதில், " விஜய் பங்கேற்ற இப்தார் நோம்பு நிகழ்ச்சி போன்று வேறு எந்த இப்தார் நோம்பு நிகழ்ச்சியையும் நான் பார்த்ததில்லை.
இந்த இப்தார் நோம்புக்கு வரும்போதே தேர்தல் பரப்புரைக்கு வேனில் வருவது போன்று கையை ஆட்டிக்கொண்டே வந்தார் அதுமட்டுமின்றி தொப்பி வேறு அணிந்திருந்தார்.
சிலர் குடித்துவிட்டு வேறு வந்ததாக சொல்கிறார்கள். சம்மந்தமில்லாதவர்கள் நுழைந்து புனிதத்தன்மையையே மாசுபடுத்தியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்" என்று கூறியுள்ளார்.