ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை.. முக்கிய காரணமே வளர்ப்பு மகன் தானாம்!! பிரபலம்..

Jayam Ravi Gossip Today Actors Divorce Tamil Actors
By Edward Jun 28, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது. எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பார்கள் என்பது கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு விவாகரத்து தகவல் வருகிறது. இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளனர், ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர். சில பத்திரிக்கைகளில் ஜெயம் ரவி - ஆர்த்திக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது என்றும் விரைவில் விவாகரத்து தொடர்பான தகவலை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை.. முக்கிய காரணமே வளர்ப்பு மகன் தானாம்!! பிரபலம்.. | Journalist Open Reason Jayam Ravi Aarthi Divorce

சிலர், இது போன்ற செய்திகள் உண்மை இல்லை, வெறும் வதந்தியே என்று சொல்கின்றனர். அதிலும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, கணவருடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டுள்ளார். இப்படியொரு சூழலில் ஜெயம் ரவி - ஆர்த்திக்கு இடையில் பிரச்சனை வர 25 கோடி ரூபாய் தான் என்று கூறப்படுகிறது.

சைரன் படத்தினை தொடர்ந்து ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வைத்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க முடிவெடுத்திருந்தாராம். அப்படத்திற்காக ஜெயம் ரவி 25 கோடி சம்பளம் கேட்டதால் ஆர்த்தியின் அம்மா சுஜாதா முடியாது என்று கூறியதால் சண்டை ஆரம்பித்திருக்கிறது என்று கூறப்பட்டது.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை.. முக்கிய காரணமே வளர்ப்பு மகன் தானாம்!! பிரபலம்.. | Journalist Open Reason Jayam Ravi Aarthi Divorce

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேட்டியொன்றில், ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா வீட்டில் சங்கர் என்ற நபர் இருக்கிறார். அவர் சுஜாதாவின் வளர்ப்பு மகன். அவர்தான் தயாரிப்பு பணிகளை முழுமையாக கவனித்து கொள்வதால் ஒரு கட்டத்தில் சங்கருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சங்கர் சொல்வதை ஜெயம் ரவி கேட்க வேண்டும் என்று ஆர்த்தியின் அம்மா சுஜாதா அறிவுத்தினார். ஜெயம் ரவி அதற்கு மறுத்துவிட்டதால், அந்த கோபத்தை ஆர்த்தி மீது காட்டியதால் தான் தற்போது விவாகரத்து வரை வந்திருப்பதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது பலருக்கும் புது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை.. முக்கிய காரணமே வளர்ப்பு மகன் தானாம்!! பிரபலம்.. | Journalist Open Reason Jayam Ravi Aarthi Divorce