உருகிஉருகி காதலிச்சேன்..எனக்கு ஆப்பு வைத்துவிட்டு போய்ட்டார்!! கண்கலங்கிய ஜாய் கிரிஸில்டா...

Gossip Today Actress Madhampatty Rangaraj
By Edward Apr 11, 2026 08:30 AM GMT
Report

ஜாய் கிரிஸில்டா

நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக கூறி கடந்த ஆண்டு புகாரளித்தார். இதனையடுத்து ஜாய் கிரிஸில்டாவுக்கு சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்ததை அடுத்து, டிஎன்ஏ டெஸ்டில் மாதம்பட்டி தான் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு தந்தை என்று உறுதியானது.

உருகிஉருகி காதலிச்சேன்..எனக்கு ஆப்பு வைத்துவிட்டு போய்ட்டார்!! கண்கலங்கிய ஜாய் கிரிஸில்டா... | Joy Chrizildaa Broke Down In Tears While Speaking

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஜாய் கிரிஸில்டா உருக்கமாக பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி இறந்து 7 ஆண்டுகளான போதும், அப்பெண்ணை மறக்காமல் அந்த காதல் மனைவியை நினைத்து வாழ்ந்து வரும் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய ஜாய் கிரிஸில்டா, காரில் வரும்போது சிவசங்கரியிடம், பெண்கள் நிகழ்ச்சியில் எதற்காக ஆணுக்கு இவ்விருது தரவேண்டும் என்று கேட்டேன்.

உருகிஉருகி காதலிச்சேன்

அவர் உங்களை பற்றி சொன்னார், உடனே உங்களின் இன்ஸ்டாகிராமை பார்த்தேன், பார்த்ததுமே என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அதன்பின் இவருக்கு விருதை நான் தான் தருவேன் என்று சொன்னேன், இப்படிப்பட்ட மனிதரை காண்பது மிகவும் அரிது. நாம் உயிருக்கு உயிராக நேசித்தவர்கள் நம் வாழ்க்கையில் இல்லை என்றாலும், அவரின் நினைவுகளோடு வாழ்ந்து வருவது மிகப்பெரிய விஷயம்.

உருகிஉருகி காதலிச்சேன்..எனக்கு ஆப்பு வைத்துவிட்டு போய்ட்டார்!! கண்கலங்கிய ஜாய் கிரிஸில்டா... | Joy Chrizildaa Broke Down In Tears While Speaking

அதுவும் இந்த காலத்தில் இப்படிப்பட்ட ஒருவரை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர் நினைத்து இருந்தால், மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்கியிருக்கலாம், ஆனால் இன்னும் அவர் மனைவியின் நினைவுகளை மறக்காமல் வாழ்ந்து வருகிறார். நான் ஒருவரை உருகி உருகி காதலித்தேன், ஆனால் அவர் எனக்கு ஆப்பு வைத்துவிட்டு போய்விட்டார். ஆனால் இவர் அன்பின் உதாரணமாக இருக்கிறார் என்று மேடையிலேயே கண்ணீருடன் பேசியிருக்கிறார் ஜாய் கிரிஸில்டா.