திருமணமான 5 ஆண்டுகளில் விவாகரத்து!! ஜாய் கிரிஸில்டாவின் முதல் கணவர் ஜோதிகாபட இயக்குநரா?
ஜாய் கிரிஸில்டா
பிரபல சமையல் கலைஞராக திகழ்ந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா குறித்த செய்திகள் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஜாய் கிரிஸில்டா பற்றிய தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. ஜாய் கிரிஸில்டா, விஜய்யின் ஜில்லா, ரவிமோகனின் மிருதன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.
முதல் கணவர்
ஜாய் கிரிஸில்டா 2018ல் இயக்குநர் ஜே ஜே ப்ரெட்ரிக் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையையும் பெற்றிருக்கிறார்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜாய் கிரிஸில்டாம் 5 ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்தப்பின் 2023ல் விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனையடுத்து தான் மாதம்பட்டி ரங்கராஜுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கர்ப்பமாகினார்.
இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் முதல் கணவர் நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தினை இயக்கியவராம். லாக்டவுன் சமயத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பிரசாந்தின் அந்தகன் படத்தை இயக்க கமிட்டாகி சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். தற்போது ஜாய் கிரிஸில்டாவின் முதல் திருமண புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.


